அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு வங்கக் கடலோரம் தனி ஆட்சி புரியும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று இலட்சக்கணக்கான மக்களின் அரோகரா கோஷங்களுடன் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் திருவிழாவானது 7 ஆம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழாக் கோலம் பூண்டு இன்று சமுத்திர தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.