Thursday, August 14, 2025 10:37 am
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக இன்று (14) பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருகோணமலை முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலம் இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதை நிறுத்தவும் வன நிலங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

