கம்போடியாவுடனான மோதலுக்குப் பின்னர் தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க 10,000 இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்ய தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள்தொகை ,குறைந்து வரும் உள்நாட்டுப் பணியாளர்களை எதிர்கொள்ளும் தாய்லாந்து, ஏற்கனவே விவசாயம், கட்டுமானம் ,உற்பத்தித் துறைகளில் பதிவுசெய்யப்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.
தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்ருங்கிட் கூறுகையில், 30,000க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், ஆரம்ப கட்டத்தில் 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார். புதிய கொள்கையின் கீழ் நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.