திங்கள்கிழமை நள்ளிரவு முதல் போர்நிறுத்தத்தை அமல்படுத்த தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாட்டுத் தலைவர்கள்ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம்தெரிவித்தார்.
கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டுக்கும் தாய்லாந்துப் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்க்கும் இடையிலான போர்நிறுத்தச் சந்திப்பை திங்கள்கிழமை பிற்பகல் அன்வர் புத்ராஜெயாவில் உள்ள மலேசியப் பிரதமரின் இல்லத்தில் நடத்தினார். மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயாங் யூஜிங் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் படிப்படியாக பதற்றத்தைக் குறைக்கும் செயல்முறையையும், அது செயல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் வழிமுறையையும் கோடிட்டுக் காட்டினார்.