தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொருங்கியதில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்கொக்கிலிருந்து தென்மேற்கே130 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடலில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே நேற்று (25) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்