2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் தங்களது என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் தற்போது என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து வருகிறது. பாஜகவுக்கும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது.
ஏற்கனவே விஜய்யை புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்த நிலையில், அவ்வப்போது இருவரும் கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும், விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிக்க கூட ரங்கசாமி தான் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
என் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்த போது, 2026 சட்டமன்ற தேர்தலில் புதுவையில் மட்டுமின்றி தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே அந்த கட்சிக்கு புதுவை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், வி ழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ரங்கசாமிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு