தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 34,497 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கருவுற்றிருப்பதாக கூறப்படுகிறது.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 18 வயதிற்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்பவர் மற்றும் அதற்கு துணை நிற்பவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்கிறது. இருப்பினும், இந்த சட்டம் பல இடங்களில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
படித்த பட்டதாரிகள் கூட இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சமூகத்தின் பல அடுக்குகளில் குழந்தை திருமணங்கள் வேரூன்றி இருப்பதை உணர்த்துகிறது. இந்த நிலையை மாற்ற, சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதோடு, மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு