தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார் ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கோப்பாய் சந்திப் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ்ஸில் பயணித்த 10 பேரும் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார் பிரதமர்
- 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்
- பேக்கோ சமனின் சகா எம்பிலிப்பிட்டியில் கைது
- வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் கைது
- பஸ்களை அலங்கரிக்கும் சுற்றறிக்கை இரத்து
- சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து
- உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா