மே மாதம் 6ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்க தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய தேர்தலின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
