கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இனம், மொழி, சாதி, கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஓர் அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கொத்மலை பிரதேச சபையின் சர்வஜன அதிகார கட்சியின் உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தசி கணேஷன் அழைப்பு விடுத்துள்ளார்.
கொத்மலை பிரதேச சபையின் கன்னி அமர்வில் உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
இங்கு எதிர்க்கட்சி கிடையாது. கட்சி, இனம், மதம், மொழி மற்றும் சாதி அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமாக வேலை செய்ய வேண்டும்.
கொத்மலை தொகுதியில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு, ஆராய்ந்து அவற்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் சம்பந்தபட்ட அமைச்சு, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், NGO, சமூக அக்கறை கொண்டவர்கள் என அனைவரின் கவனத்துக்கும் கொண்டு போய் தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்.
சபையில் அனைவரும் மக்கள் நலனுக்காக ஒற்றுமையாக கை கோர்த்து செயல்படுவோம்” என அழைப்பு விடுத்தார்.