கலிபோர்னியாவின் அதிவேக இரயில் திட்டத்திற்கான 4 பில்லியன் அமெரிக்க டொலர் கூட்டாட்சி நிதியை இரத்து செய்ததை அடுத்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மீது வழக்குத் தொடருவதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில ஆளுநர் கவின் நியூசம் வியாழக்கிழமை அறிவித்தார்.
இந்த முடிவை “அற்பமானது” என்றும் “அரசியல் பழிவாங்கல்” என்றும் நியூசம் விமர்சித்தது, இது “மத்திய பள்ளத்தாக்கின் மீதான ஒரு இதயமற்ற தாக்குதல், இது உண்மையான வேலைகள், வாழ்வாதாரங்கள் என்பவற்றை ஆபத்தில் ஆழ்த்தும்” என்று அறிவித்தார்.
எதிர்கால நிர்வாகம் நிதியை மீட்டெடுத்தாலும், ரயில்கள் ,மின்சார அமைப்புகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை மீண்டும் வெளியிட பல ஆண்டுகள் ஆகலாம், இதனால் பணிகள் நிறைவடைவது மேலும் தாமதமாகும் என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.