டெல்லியிலும் ,அதன் அருகிலுள்ள நகரங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன,சுமார் 100 விமானங்கள் தாமதமாகின.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளது.
காலை 5.30 மணி முதல் 5.50 மணி வரை, பிரகதி மைதானத்தில் அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
டெல்லி விமான நிலையம், X (முன்னர் ட்விட்டர்) இல், மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
மேலும் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு பயணிகள் அந்தந்த விமான
நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தியது.
ஏர் இந்தியா , இண்டிகோ ஆகிய இரண்டு விமான சேவைகளும் இதே போன்றதொரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. வட இந்தியாவின் பிற பகுதிகளில் விமான நடவடிக்கைகள் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா குறிப்பிட்டது.வானிலை சீராகும் வரை குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், வெளியே செல்வதைத் தவிர்க்கவும் IMD அறிவுறுத்தியுள்ளது.