இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராதிகா யாதவ் மீது அவரது தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த துப்பாக்கிசூட்டிற்கான காரணம் என ராதிகா யாதவின் தந்தையிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது அவரது தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தினால் இது தொடர்பாக ராதிகா யாதவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த அவரது தந்தை ராதிகா யாதவை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!