இந்த ஆண்டு இதுவரை 27,932 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாகவும் 16 பேர் மரணமானதாகவும் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 45 சதவீத பேர் பாதிக்கப்படனர். மேற்கு, கிழக்கு, சபரகமுவ,தெற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு மற்றும் சின்னம்மை பரவலைத் தடுக்க, நாளை (30) முதல் அடுத்த மாதம் 6 ஆம் திக தி வரை நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.