டொனால்ட் ட்ரம்பின் கையில் தோன்றிய பெரிய காயம், அவர் அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை கடந்த திங்கட்கிழம ட்ரம் சந்தித்தபோது கையில் இருந்த காயம் வெளிப்பட்டது. இது அவரது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் ஊகங்களைத் தூண்டியது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட், நவம்பர் மாதங்களில் அமெரிக்கத் ஜனாதிபதி ட்ரம்பின் வலது கையில் சிவத்தல் அல்லது சிராய்ப்பு காணப்பட்டதாக ஸ்கை நியூஸின் அமெரிக்க கூட்டாளர் நெட்வொர்க் NBC தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், கைகுலுக்கல் காரணமாக ஏற்பட்ட காயம் இது என்று கூறியுள்ளார்.
“ஜனாதிபதி ட்ரம்ப் மக்களின் மனிதர், வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியையும் விட அவர் தினமும் அதிகமான அமெரிக்கர்களைச் சந்தித்து கைகுலுக்குகிறார்.
“அவரது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது, அதை அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்,” என்று திருமதி லீவிட் கூறினார்.
“ஜனாதிபதி ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வேலை செய்து கைகுலுக்கிக்கொண்டிருப்பதால் அவரது கையில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.