டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சியில் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் “பாரம்பரியத்திற்கான டிஜிட்டல்” செயற்றிட்டத்தின் மூலம் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் ப.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டார்.
வடக்கு வலய உதவிப்பதிவாளர் நாயகம் தாரகா பிறேம்ஆனந், மாவட்ட மேலதிக அரச அதிபர் அஜிதா பிரதீபன், பச்சிலைப்பள்ளி, கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
Trending
- அமெரிக்க கடற்படை சீல் பட்ஜ் பெற்ற முதல் இலங்கையர்
- சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி மகாவலியில் மாயம்
- காஸாவிற்குள் பாராசூட் மூலம் உதவி செய்ய இஸ்ரேல் அனுமதிக்கிறது
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்