Thursday, April 24, 2025 12:20 am
தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு முறையை செயல்படுத்த அமைச்சு பரிசீலித்து வருகிறது.

