பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஒரு கோடி ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தனது சட்டத்தரணி ஊடாக டயனா கமகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான போதே, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
செல்லுபடியாகும் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் டயனா கமகேவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கடந்த 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.