இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் நடைபெறும். நண்பகல் ஒரு மணிக்கு அன்னாரின் பூத உடல் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.