தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 328 வது மலர் வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை [25] தலைமையில் காலை 10:45 மணியளவில் இடம் பெற்றது.
வெளியீட்டுரையினை இளைப்பாறிய கிராம சேவகர் க.ஶ்ரீஸ்கந்தராசாவும், மதிப்பீட்டுரையை –
பிரபல சட்டத்தரணியும், பதில் நீதவானுமாகிய சோ.தேவரஜாவும் வழங்கினர்.
காரைநகர்,களபூமி கிராமத்தை சேர்ந்த மருதனார்மடம் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவி, அச்செழு பகுதியை சேர்ந்த அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவி , சுழிபுரம், பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி , வேலனை, 06ம் வட்டாரத்தை சேர்ந்த மாணவி ,பலாலி வடக்கு, வசாவிளான் பகுதியை சேர்ந்த மாணவி,
தெல்லிப்பளை, மாவைகலட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஆகிய அறுவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
