பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கடந்த 25ஆம் திகதி பெலியத்தவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 50 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவருக்கு பயணத் தடையையும் விதிக்கப்பட்டது.