ஜேர்மனிய பாராளுமன்றத்தின் கீழ் சபையான அடுத்த பன்டெஸ்டாக்கின் அமைப்பைத் தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில் இரண்டு கட்சிகள் முன்னில பெற்றுள்ளதக தெர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பாளரான ARD வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின்படி, ஜேர்மனியின் பழமைவாத கூட்டணியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (Cடூ) ,கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) ஆகியவை தேர்தலில் முன்னிலை வகித்துள்ளன.
CDU/CSU 29 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், அதைத் தொடர்ந்து ஜேர்மனிக்கான மாற்று (AfD) 19.5 சதவீத வாக்குகளையும், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 16 சதவீத வாக்குகளையும் பெற்றதாகவும் காட்டுகின்றன.பசுமைக் கட்சி 13.5 சதவீதத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்தது, டை லிங்கே 8.5 சதவீதத்துடன் முன்னேறியது.