ஜா-எல பொலிஸ் பிரிவில், ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிச் சென்ற கார் மோதி பாதசாரி உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரி பலத்த காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் ஜா-எல – கனுவான பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.