இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை [4]இரவு நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,11 பேர் காயமடைந்தனர் என்று புதன்கிழமை காலை ஜகார்த்தா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் தேசியானா கார்த்திகா பஹாரி உறுதிப்படுத்தினார். நள்ளிரவுக்கு சற்று முன்பு போகோர் ரீஜென்சியில் உள்ள சியாவி டோல் கேட் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி பிரேக் செயலிழந்ததால், டோல்கேட்டில் இரண்டு கார்கள் மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி இரவு 11:30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் போகோர் ரீஜென்சி காவல்துறைத் தலைவர் எகோ பிரசெட்யோ தெரிவித்தார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு