Friday, July 25, 2025 8:30 am
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பொருளாதாரம், சுற்றுலா, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

