முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று முதல் 13ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளகிறார்.
இந்த விஜயத்தில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் நடைபெறவுள்ள உலக அரசாங்களுக்கு இடையிலான உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தகவல் தொழிநுட்பம் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி சுற்றுலா நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.