இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது கடிதத்தில் தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் கூறினார்.
வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறு அனுர குமார திசாநாயக்க இக் கடிதத்தில் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.