மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் “உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மஹா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது என்றும் இந்த நாளில் மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபட்டு வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.