பெலரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 86.82 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெலாரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
செர்ஜி சிரான்கோவ் 3.21 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஒலெக் கைடுகேவிச் (2.02 சதவீதம்), அன்னா கனோபட்ஸ்காயா (1.86 சதவீதம்) , அலெக்சாண்டர் கிஷ்னியாக் (1.74 சதவீதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். சுமார் 3.60 சதவீத வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களித்தனர்.
ஜனவரி 26 அன்று பெலாரஸில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு 85.69 சதவீதமாக இருந்தது.பெலாரஷ்ய சட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பவார்.
லுகாஷென்கோ முதன்முதலில் பெலாரஸின் ஜனாதிபதியாக 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2001, 2006, 2010, 2015 , 2020 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Trending
- முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்க விலை
- போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடைகளில் பொருத்தக்கூடிய கமராக்களை வழங்க தீர்மானம்
- ஹெலிகொப்டரில் தொங்கியபடி தப்பிச் சென்ற நேபாள அமைச்சரின் குடும்பத்தினர்
- 106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
- அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து நீக்கம்
- செப்டம்பர் 21ஆம் திகதி சூரிய கிரகணம்
- மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு
- குடும்பஸ்தர்கள் இடையே மோதல் : ஒருவர் பலி