பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.
குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மேற்பகுதி, கண்ணாடி போன்று பளபளப்பாகக் காணப்படுகின்றது.
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது, அதிக வெப்பத்தால் எரிந்து இவ்வாறு உருமாறியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். செவ்வாய் கிரக கல்லுடன் சேர்த்து நியூயோர்க்கின் ஏல நிறுவனம், சிறிய டைனோசரின் என்புக்கூட்டையும் ஏலத்தில் விடவுள்ளது. குறித்த என்புக்கூடு அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்தில் 1996ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப ஏல தொகையாக, இந்திய மதிப்பில் 3.3 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களும், எதிர்வரும் 16ஆம் திகதி ஏலத்திற்கு விடப்படவுள்ளன.
Trending
- பெண்களுக்கான குறும்படக் கதை சொல்லல்
- இளையோர் களமாகிய ஹைக்கூ கவியரங்கம்
- இலங்கைக்கு UNDP உதவி
- பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ட்ரம்ப்
- முன் பிணை மனு தாக்கல் செய்தார் ராஜித
- வைரலானது கொழும்பு மேயரின் நடனம்
- துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்
- பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை