தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் வழக்கு தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வு அறிக்கை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் நேற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Trending
- குப்பை வண்டியில் சென்ற உள்ளூராட்சி சபைத் தலைவர்கள்
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருக்கு மரண தண்டனை
- நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
- 117 வருடங்களின் பின் மூளாய் சைவப்பிரகாசவில் 9A
- விவாகரத்து பெற்ற பெண்கள் சுற்றுலா
- பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் நவீன அழகு கலை நிலையம்
- காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்வோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை
- பரிந்துரைகளை செயல்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை : மனித உரிமைகள் ஆணைக்குழு