யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை பார்வையிட்டிருந்தனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மனித புதைகுழியை பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும் இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனித புதைகுழிகள் இருக்கின்றனவா என ஆராய மனிதப் புதைகுழி பகுதியில் இன்று ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீஜெயவர்வத்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைக்கழகம் ஊடாக பெற்று குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.