சூரியன் இல்லை என்றால் பூமியே இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் சூரியனில் பல மர்மங்கள் இருக்கும் நிலையில், அது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே சூரியனில் மழை பெய்ய என்ன காரணம் என்பதை இப்போது ஒரு வழியாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுட்டெரிக்கும் சூரியனில் மழையா என்ற சந்தேகம் வரலாம். ஆம், மழை தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.ரியனில் மழை பெய்யும் ரகசியத்தை ஹவாய் பல்கலைக்கழக வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
அதேநேரம் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். சூரியனில் பெய்யும் மழை என்பது நமது பூமியில் பெய்யும் நீர்த்துளிகளைப் போல இருக்காது. அதாவது சூரியனின் நீர் துளிகள் மழையாகப் பெய்யாது. அதற்குப் பதிலாகச் சூரிய மழை அதன் வெளிப்புற அடுக்கான கரோனாவில் ஏற்படுகிறது. இது மிகவும் வெப்பமான பிளாஸ்மா பகுதியாகும்.
இந்த சூரிய மழை நிகழ்வின்போது குளிர்ந்த மற்றும் அடர்த்தியான பிளாஸ்மா கட்டிகள் கரோனாவுக்கு மேல் எழும்பி, பின்னர் மீண்டும் சூரியனை நோக்கி இறங்குகின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் சுட்டெரிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில்.. குளிர்ச்சியான பிளாஸ்மா மேலே எழும்பி மீண்டும் மழையைப் போலச் சூரியனை நோக்கிச் செல்லும். சூரியன் வெப்பம் மோசமாக இருக்கும்போது இந்தச் செயல்முறை எப்படி நிகழ்கிறது என்பது பல ஆண்டுகளாகவே ஆய்வாளர்களுக்குப் புதிராக இருந்தது. ஊழியர்களை தூக்கும் IT நிறுவனங்கள்
இந்த நீண்டகால மர்மத்திற்குத் தான் இப்போது விடை கிடைத்துள்ளது. வானியலாளர் ஜெஃப்ரி ரீப் , லூக் பெனாவிட்ஸ் ஆகியோர் இணைந்து இதற்கான பதிலைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பு Astrophysical Journalல் வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆய்வாளர்களைக் குழப்பிய சூரிய மழை குறித்த அத்தியாவசிய விளக்கத்தை இது கொடுக்கிறது.
“சூரியனின் வெளிப்புறமான கரோனாவில் உள்ள பல்வேறு தனிமங்கள் பல காலமாக அப்படியே இருக்கும் என்றே இத்தனை காலமாக நாம் கருதினோம்.. ஆனால் அது உண்மையல்ல.. இரும்பு போன்ற துகள்கள் காலப்போக்கில் மாறுகிறது. இதன் காரணமாகவே சூரியனில் மழை போன்ற போக்கு ஏற்படுகிறது. இங்கு நாம் மாடலை வைத்து நடத்திய ஆய்வில் இரும்பு துகள்கள் மாறும்போது சூரியனில் ஏற்படுவது போல மழை ஏற்படுகிறது” என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சூரியப் பிழம்புகளின் போது சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. மேலும், சூரிய பிழம்புகள் பூமியை நோக்கி வரும்போது அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கண்டறியவும் இது உதவுகிறது. இதன் மூலம் நிமிடங்களில் நடக்கும் சூரியப் பிழம்புகள் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.
சூரியன் எப்படி உண்மையில் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுவதாக ஆய்வாளர்கள் கூறினர். அதேநேரம் இதில் கூடுதல் ஆய்வுகளும் செய்ய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.