பருத்தித்துறை நகரசபையின் அமர்வு இன்று காலை 9:00 மணிக்கு நகரசபைத் தலைவர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தலைமைலமையில் ஆரம்பமானது.
பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிற வேற்றப்பட்டன.
புலம்பெயர் உறவுகளின் 28 மில்லியன் நிதி பங்களிப்பில் கோரியடி இந்துமயானம், பூரமைப்பதற்க்கு அனுமதிப்பது என்றும், தேசிய வாசிப்பு மாதத்தை இம்முறையும் சிறப்பாக செய்வதென்றும், பருத்தித்துறை மீன் சந்தையிலுள்ள குழிரூட்டல் பெட்டியை குறைந்த கட்டண அறவீட்டுடன் மீனை குழிரூட்ட வசதியளித்தல், மரக்கறி சந்தையிலிருந்து 500 மீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் மரக்கறி வியாபராம் மேற்கொள்வோர் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடங்களுக்கு மீள் மதிப்பூடு செய்தல், 2025 ம் ஆண்டுக்கான கட்டணம் செலத்தாத விளப்பரப்பலகைகளை அகற்றுதல், நவீன சந்தயையில் நடைபாதைக்கு இடையூறான வியாபார நடவடிக்கைகளை நிறுத்துதல்,
வீதியில் திரியும் நாய்களுக்கு உரிமையாளரிடமிருந்து ரூபா 5000/- , வீதியில் திரியும் மாடு ஒன்றிற்கு 4750/- குற்றப்பணமும், பராமரிப்பு செலவு 750/- ம், பிடிகூலி ஆயிரமும் அறவிடுதல், அபிவிருத்தி செய்யப்படாத காணிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல், சோலை வரி தொடர்பாக மீள் மதிப்பீடு செய்தல், பருத்தித்துறை நகரசபையின் மரக்கறி சந்நையை பழைய கட்டிடத்தொகுதிக்கு மாற்றவேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான திரு.றஜீவன் நகரசபைக்கு அனுப்பிய கடிதத்தை சபை நிராகரிப்பதென்றும், பருத்தித்துறை மரக்கறி சந்தையை தற்போது உள்ள இடத்திலிருந்து பழைய இடத்தில் சாத்திய பாட்டு அறிக்கையின் அடிப்படையில் கீழ்த்தளம் சாத்தியமெனில் கீழ்த்தளத்திற்கு மாற்றுவது என்றும், அவ்வாறு இல்லை எனில் மேல்மாடிக்கே மாற்றுவது என்றும், நகரசபைக்கு கழிவு கொட்டுவதற்கு இடம் இன்மை காரணமாக பருத்தித்துறை பிரதேச சபையால் நகரசபையின் காணியில் கழிவு கொட்ட கூடாது என்கின்ற 29/07/2025 நாளைய தீர்மானம் உள்ளதால் ஆளுநரின் உதவி பெறுவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 13 உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உட்படஅறுவர் எதிராக வாக்காளித்தனர்.