மேற்கு சூடானில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக சூடான் விடுதலை இராணுவம் (SLM) தெரிவித்துள்ளது. ஒரே ஒரு உயிர் பிழைத்தவர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், டார்பூர் பிராந்தியத்தில் உள்ள மர்ரா மலைகள் பகுதியில் உள்ள கிராமம் அழிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
பல நாட்களாக பெய்த கனமழைக்குப் பிறகு, ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவத் தலைவர் அப்தெல்வாஹித் முகமது நூர் அறிக்கையில் தெரிவித்தார்.உடல்களை மீட்பதற்கு உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சூடான் இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி ஓடிய குடியிருப்பாளர்கள், உணவு , மருந்துகள் போதுமானதாக இல்லாத மர்ரா மலைகள் பகுதியில் தங்குமிடம் தேடினர்.