2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் போது பூஜ்ஜிய-உமிழ்வு , அதனுடன் தொடர்புடைய சார்ஜிங் உள்கட்டமைப்பு கொண்ட ஐநூறு மின்சார பாடசாலை பஸ்கள் மாற்று இயக்கமாகப் பயன்படுத்தப்படும் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் திங்களன்று அறிவித்தார்.
ஆண்டுதோறும், கோடைக்காலம் தொடங்கும் போது, அமெரிக்கா முழுவதும் பாட்சாலைப் பஸ்கள் பருவகால ஓய்வுக்காக நிறுத்தப்படும்.
வட அமெரிக்காவின் முன்னணி பாடசாலை பஸ் சேவை வழங்குநரான ஹைலேண்ட் எலக்ட்ரிக் ஃப்ளீட்ஸ், உள்ளூர் மாவட்டங்களின் மின்சாரப்பாடசாலை பஸ்களை மீண்டும் பயன்படுத்த லொஸ் ஏஞ்சல்ஸுடன் இணைந்து, விளையாட்டுப் போட்டிகளின் செயல்பாடுகளுக்கு முக்கியமான அங்கீகாரம் பெற்றுள்ளது.
விலையுயர்ந்த புதிய வாகனக் குழுக்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவின் மிகவும் அடையாளம் காணக்கூடிய சின்னங்களில் ஒன்றான மஞ்சள் பாடசாலை பஸ்களை நம்பியிருக்கும், இது சொந்த மண்ணில் கட்டப்பட்ட பூஜ்ஜிய-உமிழ்வு தீர்வாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.