சம்பியன்ஸ் கிண்ண முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா. இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 231 ஓட்டங்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 228 ஓட்டங்கள் எடுத்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா சர்கார், ‘டக்’ அவுட்டானார். கேடன் நஜ்முல் ஷான்டோ ‘டக்’ அவுட்டாகினார். மெஹிதி ஹசனையும்5, தன்ஜித் ஹசன் (25), முஷ்பிகுர் ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தார்.
தவ்ஹித், ஜாக்கர் அலி ஜோடி இணைந்து அணியை மீட்டது.
. 6வது விக்கெட்டுக்கு 154 ஓட்டங் சேர்த்த போது, ஷமி பந்தில் ஜாக்கர் அலி (68) வெளியேறினார். ரிஷாத் (18) , தொடை பின்பகுதி காயத்தை பொருட்படுத்தாமல் ஆடிய தவ்ஹித் (100), ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் அடித்து ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 228 ஓட்டங்கள் எடுத்தது.இந்தியா சார்பில் ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ரோகித் 41 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். சுப்மனுடன் இணைந்தார் கோலி. கோலி 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய சுப்மன் சதம் அடித்தார்..
ராகுல் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 231 ஓட்டங்கள் எடுத்தது.
சுப்மன் 101, ராகுல் 41 ஓட்டங்கள் எடுத்தனர்.