அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த சிரேஷ்ட வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கான பிரியாவிடை நேற்று செவ்வாய்க்கிழமை (02) அட்டாளைச்சேனையில்நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் குழாமினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரியாவிடையின் போது, சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த காலங்களில் அவரினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்திட்டங்கள் பற்றியும், அவரின் சமூக சேவைகள் பற்றியும் ஞாபகப்படுத்தப்பட்டு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த காலங்களில் “வளமான சமூகத்தை உருவாக்கல்” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, ஆலிம்நகர், ஆலங்குளம், சம்புநகர், தீகவாபி போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் காலடிக்குச் சென்று
சிறுவர்களுக்கான மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவு வழங்கள் முறைமைகள் தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தியதுடன் சிறுவர்களுக்கும், பெரியோர்களுக்குமான பல பயனுள்ள விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் முன்னெடுத்திருந்தார்.