Sunday, January 4, 2026 9:15 pm
தொடர்ந்து சீரான எண்ணை உற்பத்தியைப் பேண முடிவு செய்துள்ளதாக ஒபெக்+ (OPEC+) நாடுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடந்த கூட்டத்தின் பின் அறிவித்துள்ளன.
முக்கிய எண்ணை உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான முறுகல் நிலை மற்றும் வெனிசுவேலா நாட்டின் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உலகின் எண்ணைத் தேவையில் அரைவாசியை உற்பத்தி செய்யும் எட்டு நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. அதிகரித்த உற்பத்தி காரணமாக 2025 ம் ஆண்டு எண்ணை விலை 18 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்திருந்தது.

