மிகவும் புராதனமான விழாவாக கொண்டாடப்பட்டு வரும் சீனப் புத்தாண்டு தை மாதம் 29 ஆம் திகதி புது நிலவுடன் ஆரம்பித்து மாசி மாதம் 12 ஆம் திகதி முழு நிலவு நாளில் விளக்குகளின் அலங்காரத்துடன் முடிவடையும்.
சீன புத்தாண்டு என்பது பனிக்காலம் முடிவடைந்து இளவேனில் காலம் ஆரம்பமாவதை குறிப்பதாக அமைகிறது. சீன ராசிகள், 12 விலங்குகளின் பெயர்களினால் அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு பாம்பின் பெயரால் அழைக்கப்படுகிறது. பாம்பு நீண்ட ஆயுள், ஞானம் மற்றும் மர்மத்தின் குறியீடாக இருக்கிறது.
சீன மக்கள் பல்வேறு நாடுகளில் பரந்து வாழ்வதால் உலகம் முழுவதும் பொதுவாகவும், தென்கிழக்காசியாவில் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.