இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனப் பிரதமரை பிரதமர் லி கியாங்கை இலங்கைப் பிரதமர் ஹரினிசந்தித்தார். சீனாவிற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பீஜிங்கில் பிரதமர் லி கியாங்குடன் மரியாதை நிமித்த சந்திப்பை நடத்தினார் ஹரினி.
2025 ஆம் ஆண்டு பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்திற்கு சீனா அழைத்ததற்கு இலங்கையின் நன்றியை அவர் தெரிவித்தார், மேலும் சீன மக்கள் குடியரசின் 76 வது ஆண்டு நிறைவையொட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ,கலாசார பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார், மேலும் “சுத்தமான இலங்கை” திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு, நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நெறிமுறை நிர்வாகம் உள்ளிட்ட இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து சீனப் பிரதமருக்கு ஹரினி விளக்கினார்.
கடன் மறுசீரமைப்பு ஆதரவு, பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிஅம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்ட பேக்கேஜிங் ஹப் உள்ளிட்ட பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டன.