தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சீன மற்றும் மியான்மார் நாட்டவர்கள் குழு ஒன்று 11 மாடிக் கட்டிடத்தின் 10 ஆவது மாடியில் வசித்து வருகின்றனர்.
இறந்தவர் வளாகத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.