செப்டம்பர் மாதத்திற்குள் சீட் பெல்ட் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், அனைத்து விரைவுச் சாலைகளிலும் செப்டம்பர் 30 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், சட்டத்தை பின்பற்றத் தவறும் பேருந்துகளுக்கான அனுமதிகள் இரத்து செய்யப்படும் என்றும் கூறினார். 2011 முதல் சீட் பெல்ட் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அது அரிதாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் 2,350 பேர் வீதி விபத்தால் இறக்கிறார்கள். சீட் பெல்ட் பயன்பாட்டை முறையாக அமல்படுத்துவது இறப்பு எண்ணிக்கையை 2,000 ஆகக் குறைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.