பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியிருந்தார்.
நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இங்கிருந்து வெளியேறியுள்ளார்.