மட் / குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு அதிபர் திரு.S.D. முரளிதரன் தலைமை வகிக்க, பிரதம அதிதியாக பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.S. நவநீதன் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு அதிதியாக திரு. S. பிரகாஷ் (விளையாட்டு திணைக்களம், கிழக்கு மாகாணம்) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. T. ராஜமோகன் (கோட்டக்கல்வி அதிகாரி), திரு. V. லவக்குமார் (உதவிக்கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி ), விசேட அதிதிகளாக திரு. K. ரவீந்திரன் (ஆசிரிய ஆலோசகர், உடற்கல்வி), திரு. P. மதியழகன் (இணைப்பாளர் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்) என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகள் தம் திறமையினை வெளிப்படுத்திய நிகழ்வாக இது அமைந்தது. இல்லங்களுக்கான முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை பிதாலக்ஸ்மி அறக்கட்டளை நிதியமானது அமரர்.மதிவதனி சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தாந்தாமலை முருகன் ஆலய ஸ்தாபகர்களில் முதன்மையாளரான பாலிப்போடி அவர்களின் ஞாபகார்த்தமாகவும் சக்தி விளையாட்டுக்கழகத்தினூடாக வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டு நிகழ்விற்கு ஆறுமுகத்தான் குடியிருப்பு, சக்தி விளையாடுக் கழகம் தனது பங்களிப்பை வழங்கியது.
ஏகன் மீடியா ஊடக அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


