இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்னா மதிப்புமிக்க ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை அடைந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
‘நச்சு குறிப்பு’ என்ற தலைப்பிலான அவரது விருது பெற்ற புகைப்படம் 60,000 க்கும் மேற்பட்ட பதிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது . இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு கழிவுக் கிடங்கில் ஒரு தனி யானை உணவு தேடும் புகைப்படமே அவருக்கு விருதைப் பற்றுக் கொடுத்தது.
இந்தப் படம், யானைகளால் பிளாஸ்டி, பொலிதீன் ஆகியவற்ரின் நுகர்வு அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது, இது செரிமானப் பிரச்சினைகளுக்கும் ஆயுட்காலம் குறைவதற்கும் வழிவகுக்கிறது.
மனித-யானை மோதலை மூன்று ஆண்டுகளாக ஆவணப்படுத்தி வரும் கருணாரத்னா, இந்த விருது வனவிலங்குகளில் மனித கழிவுகளின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை நினைவூட்டுவதாகக் கூறினார். WPY விருது வழங்கும் விழா அக்டோபர் 13 ஆம்திகதி இலண்டனில் நடைபெற உள்ளது.