புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என அந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப்பத்திரத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி வெரஹெரயில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை