பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று வழக்குகள் தொடர்பாக நேற்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.