ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.