ராவல்பிண்டியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
நாமயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 236 ஓட்டங்கள் எடுத்தது. 237 எனும் வெற்ரி இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கப்டன் நஜ்முல்ஷான்டோ, தன்ஜித் ஜோடி சிறப்பாக விளையாடியது. பிரேஸ்வெல் பந்துவீச்சில் 24 ஓட்டங்கள் எடுத்த தன்ஜித் ஆட்டமிழந்தார். மெஹிதி ஹசன் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோது 20 ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.
நியூஸிலாந்து வீரர்களின் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாததால் 21 ஓட்டங்களில் அடுத்தடுத்து முன்று விக்கெற்கள் வீழ்ந்தன.
பந்தில் தவ்ஹித் 7, முஷ்பிகுர் ரகிமும் 2 , மகமதுல்லா 4 ஒட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர். 5 விக்கெற்களை இழந்த பங்களாதேஷ் 118 ஓட்டங்கள் எடுத்துத் திணறியது.மட்டும் எடுத்து அவுட்டானார். வங்கதேசம் 118/5 என திணறியது
அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த ஷான்டோ, 77 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ரிஷாத், ஜாக்கர் ஜோடி இணைந்து அணியை மீட்க போராடியது.
ரிஷாத் 26 ஜாக்கர், 45 ஓட்டங்களில் ரன் அவுட்டானதும் பங்களாதேஷ் அடங்கிவிட்டது. வபங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 236 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் அதிகபட்சம் 4 விக்கெற்களை வீழ்த்தினார்.
237 எனும் இலகுவான இலக்கை விரட்டிய நியூஸிலாந்துக்கு பங்களாதேஷ் அதிர்ச்சியளித்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த யங்டக் அவுட்டானார். டஸ்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 5 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். ரச்சின் ரவிந்திரா, கான்வே இணைந்தனர். கான்வே 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ரச்சின் உறுதியாக நின்றார். 95வது பந்தில் ஒருநாள் அரங்கில் நான்காவது சதம் எட்டிய ரச்சின் 112 ஓட்டங்களில் , ரிஷாத் பந்தில் ஆட்டமிழந்தார்.55 ஓட்டங்கள் அடித்த லதாம் ரன் அவுட்டானார். லதாம் (55) ரன் அவுட்டானார். நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமான ரச்சின் ரவிந்திரா 3 சதங்கள் அடித்தார்.2025 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் டிராபி கிண்ணத் தொடரில் அறிமுகமான ரச்சின் ரவிந்திரா மீண்டும் சதத்துடன் ஆரம்பித்துள்ளார்.
11 இன்னிங்ஸ்களில்4 சதங்கள் அடித்த ரச்சின் ஐ.சி.சி., தொடரில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ஆனார், 34 போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன் 35 போட்டிகளில் விளையாடிய நாதன் ஆஷ்லே ஆகியோர் தலா 3சதங்கள் அடித்தனர்.
ஐ.சி.சி., தொடர்களில் ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் வீழ்த்திய 4வது நியூசிலாந்து வீரரானார் பிரேஸ்வேல். முன்னதாக வெட்டோரி இரண்டு முறையும், சான்ட்னர், பால் வைஸ்மேன் ஆகியோர் தலா ஒரு முறையும் 4 விக்கெற்களை எடுத்தனர்.
‘ஏ’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறின. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நடப்பு சம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை வெளியேறின. சம்பியன் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு கூட செல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
30 ஓட்டங்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா. இவர், 30 போட்டிகளில் 1082 ஓட்டங்கள் எடுத்தார்.
- நியூசிலாந்தின் பிலிப்ஸ் 4 ஓட்டங் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்கள் என்ற இலங்கை எட்டினார்.